×

யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் யெலனா, கரோலின்

நியூயார்க்: அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான யு.எஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடக்கிறது. அதில் ஒற்றையர் பிரிவு 2வது சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மகளிர் பிரிவு ஆட்டத்தில் லாத்வியா வீராங்கனை யெலனா ஆஸ்டபென்கோ( 26வயது, 21வது ரேங்க்), ரஷ்ய வீராங்கனை எலினா அவனேசியன்(20வயது, 66வது ரேங்க்) ஆகியோர் மோதினர். அதில் யெலனா 2 மணி 18 நிமிங்கள் நீண்ட ஆட்டத்தில் 6-3, 5-7, 7-5 என்ற புள்ளிகள் கணக்கில் போராடி வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.

மற்றொரு 2வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் நெம்பர் ஒன் வீராங்கனை டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாகி(33வயது, 623வது ரேங்க்), செக் குடியரசு வீராங்கனை பெட்ரா கிவிதோவா(36வயது, 11வது ரேங்க்) ஆகியோர் களம் கண்டனர். இரண்டு மணி 8 நிமிட ஆட்டத்தில் கரோலின் 7-5, 7-6(7-5) என்ற கணக்கில் போராடி கிவிதோவாவை வென்றார். அதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில், தகுதிச்சுற்று மூலம் வாய்ப்பு பெற்ற சுவிட்சர்லாந்து வீரர் டொமினிக் ஸ்ட்ரைக்கர்(21வயது, 128வது ரேங்க்), 4மணி நேரம் 4 நிமிடங்கள் நீண்ட ஆட்டத்தில் 7-5, 6-7(2-7), 6-7((5-7), 7-6(8-6), 6-3 என்ற புள்ளிக் கணக்கில் கிரீஸ் வீரர் சிட்சிபாசை(25வயது, 7வது ரேங்க்) வீழ்த்தி 3வது சுற்றுக்குள் நுழைந்தார்.

The post யுஎஸ் ஓபன் டென்னிஸ் 3வது சுற்றில் யெலனா, கரோலின் appeared first on Dinakaran.

Tags : Yelena ,Caroline ,US Open Tennis ,New York ,US Open ,Grand Slam ,New York City ,Dinakaran ,
× RELATED மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: 3வது சுற்றில் கார்சியா